Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மு. ந. அப்துர் ரஹ்மான் நாசர் தொடர்ந்த வழக்கில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |