தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வர வழைத்து கண் கண்ணாடியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.