Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கட்டணம் வசூல்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணத்தை விட கூடுதலாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்த பள்ளி கல்வி துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு அனகாபுத்தூர் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் 50 ரூபாய்க்கு பதில் 100 ரூபாய் வசூலிப்பதாக மனுதாரர் தொடர்ந்த வழக்கில், அறிவுறுத்தலை மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.

Categories

Tech |