தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த கல்வியாண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் சூழலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆயிரம் நர்சரி பிரைமரி பள்ளிகளை மூடுவது என்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். வாங்கிய கடனை கட்ட முடியாததால் நர்சரி பிரைமரி பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளோம். எங்கள் பள்ளிகளையும் 50 லட்சம் மாணவர்களையும் அரசே எடுத்துக் கொள்ளட்டும் என்று அவர் கூறியுள்ளார்.