தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளை பள்ளிக்கு வர வைப்பது தான் அரசின் தற்போதைய முடிவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன் பிறகுதான் முறையான வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா நிலை கட்டுக்குள் இருப்பதால் பெற்றோர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.