தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திராவிட வரலாற்றை அறியும் வகையில் வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திராவிட பள்ளியை துவக்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின். இதனை மேலும் மெருகூட்டும் வகையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மாணவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட திராவிட பள்ளிகள் தேவைப்படுகின்றன. இன்றைய வளர்கிற இளைஞர்களுக்கு திராவிடத்தின் வரலாற்றை பற்றி எடுத்துக்கூற திராவிடப்பள்ளி கட்டாயம்.
அதனால் வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம். வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலமாக எதிர்காலத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிட பள்ளிகள் கற்று தருகிறது. சமத்துவ மற்றும் சமூகநீதியின் உணர்வை எப்படி உருவாக்கினோம் என்பதை திராவிட பள்ளிகள் தெளிவுபடுத்துகிறது. இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்பட வேண்டிய விதை என்றுஅவர் கூறிஉள்ளார்.