தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.அதன்பிறகு கடந்த நவம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 4, தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் இன்று பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.