தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள் 1098, 14417, போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.