தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக சீருடை, புத்தகம், உணவு என்று பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது . அந்த வகையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் சீருடை, புத்தக பை, கால் ஏந்திகள், காலணிகள் ஆகியவை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்காக புதியதாக ஒரு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 2022- 23 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு 70.23 லட்சம் புத்தக பைகள், 35 லட்சம் காலணிகள், 71.30 லட்சம் ஜோடி காலுறைகள், 1.6 லட்சம் மழை கோட்டுகள், 1.15 லட்சம் ஆங்கில் பூட்ஸ்கள், 1.12 லட்சம் கம்பளி சட்டைகள், 25.89 லட்சம் ஜோடி காலணிகள் வழங்கப்படுகின்றது.