Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு மானியத்தொகை…. மாணவர்கள் குஷியோ குஷி…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது.

இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான மானிய தொகையை உடனடியாக வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதில், மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பித்தல், பராமரிப்பு மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். இவற்றை மார்ச் மாதம் நான்காம் தேதிக்குள் வழங்கி மார்ச் 15ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |