தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையடுத்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 (இன்று) தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 5ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தபடுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்ற மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை பள்ளி கல்வி அதிகாரிகள் தயாரித்துள்ளனர். அதன்பின் அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி காலத்தில் சில ஆசிரியர்கள் விடுப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமலும், எந்த விதமான காரணங்களும் கூறாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.