தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வருவது தொடர்பாக பெற்றோரின் ஒப்புதல் தேவையா..? என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகளில் இருந்து நேரடி வகுப்புகளுக்கு மாறுதலின் போது மாணவர்களின் சிரமத்தை போக்க இணைப்பு வகுப்புகள் நடத்தவும், கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய உதவியை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.