கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த மாதத்தில் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதோடு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் இருப்பதாலும், பள்ளிகளில்தான் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்பதாலும் தமிழக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..