Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடக்க பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரையிலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அடிப்படையில் முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன் எழுத்தான இனிஷியலையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டுவர வேண்டும்.

இதையடுத்து பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்துவிட்டு பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். ஆகவே மாணவர்கள் அனைவரும் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையொப்பமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளி கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்துவகை தொடக்கக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |