Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த எச்சரிக்கை…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு…..!!!!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிற்க வைக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சீரான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

பெற்றோரின் விருப்பப்படி படையில் மட்டுமே ஜாதி பதிவு செய்யப்படுகின்றது. சான்றிதழில் ஜாதியை குறிப்பிட விருப்பம் இல்லை என்று பதிவிடுவதற்கான வசதியும் உள்ளது. எமிஸ் தளத்தில் மாணவர்களின் ஜாதி விவரம் வராத வகையில் ஜாதியின் பிரிவு மட்டுமே வரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பணம் கட்டாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிறுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் உரிய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |