Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் ஆய்வு…. போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து வருகின்ற ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர பயன்படுத்தும் வாகனங்களில் தரத்தை போலீஸ், கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வாகனங்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி வாகனங்கள் குறித்த நீதிமன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா? வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளனவா? ஆகியவற்றை உறுதி செய்ய இந்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பள்ளி வாகனம் ஊழியர்களுக்கும் தீயணைப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வு பணியில் தொய்வு ஏற்பட்டால் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களின் பாதுகாப்புக்கு தகுதியான வாகனங்களை மட்டுமே இயக்க அனுமதிப்போம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |