தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.வருகின்ற 2025 ஆம் ஆண்டில் கல்வியில் தமிழகம் இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாடப் புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் .
அதற்காக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் சேதமடைந்த அனைத்து கட்டிடங்களில் மாணவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.