Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று (ஜூலை 9)…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படியும் பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அரசாணையின்படி பள்ளி மேலாண்மை குழுவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுக்கட்டமைப்பு செய்வது அவசியம். அதன்படி அனைத்து பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்,ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இடம்பெறும் பள்ளி மேலாண்மை குழு அமைப்பு கூட்டம் இன்று (ஜூலை 9ஆம் தேதி) நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |