கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 2 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. பின்னர் சில காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால் சில வாரங்களாக மாத்திரை விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் அவற்றின் தரத்தினை பரிசோதிக்கும் பணிகளும் நடந்தன. இந்நிலையில் மீண்டும் மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.