Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. நாளை (ஆகஸ்ட் 1) முதல் அமல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி TNSEDசெயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலி வருகை பதிவு நாளை முதல் அமலுக்கு வருகின்றது.விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருகை பதிவு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |