தமிழகத்தில் பழைய பள்ளி கட்டிடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலூர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தப்படுத்தி கட்டிட வளாகங்களில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும்.
இடிக்கப்பட வேண்டிய பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் தாமதம் இல்லாமல் உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.பேரிடர் தொடர்பான விவரங்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க மண்டல கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.