தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையில் தமிழக பல்கலைக்கழகங்களை இடம்பெற செய்யும் வகையிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடிய வகையிலும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றிய பிறகு தமிழ், இலக்கியம், கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்க பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.