Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… பிப்ரவரி 24 ஜெ. பிறந்த நாளில்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவை காப்பேன் என அனைத்து அதிமுகவினரும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் அதிமுகவை காப்பேன் என அனைத்து அதிமுகவினரும் தங்கள் வீடுகளில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். மேலும் எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு நம் கடையை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகின்றனர். உழைப்பு, உத்வேகம், ஒற்றுமை உணர்வு அவர்களை தோற்கடித்து விரோதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |