Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்பாக கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளை ஒப்பிடும்போது இம்முறை பாதிப்பு மிக வேகமாக பரவி வந்தாலும் பெரியளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வீட்டுத் தனிமையிலேயே சிகிச்சை மேற்கொண்டு ஏராளமானோர் சில நாள்களில் குணமாகிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், சிகிச்சை தேவைப்படுவோரும் 2-வது அலையை ஒப்பிடுகையில் தற்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இதுதான் நிலைமை.

இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற 3 நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. திருமணம், துக்க நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ஆம் தேதி வரை  அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது .

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். கொரோனா தினசரி பாதிப்பு . 30 ஆயிரத்தை கடந்திருந்தாலும் நேற்று இறங்குமுகமாக இருக்கிறது. இதற்கிடையில் பாதிப்பு குறையத் தொடங்கினால் ஞாயிறு முழு ஊரடங்கு தேவை இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை தொடங்கி நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு என்ன முடிவுகள் எடுக்கப்போகிறது என்பது தொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும் என கூறப்பட்டது. பள்ளிகள் திறக்க தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்க 15- 18 வயதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |