Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிரச்சாரம்…. வெற்றி கண்ட புலிப்படை…. கெத்து காட்டிய கருணாஸ் …!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5%இடஒதுக்கீட்டை நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், ஒட்டுமொத்த சமூக மக்களுக்கு அநீதி இழைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓபிஎஸ் இபிஎஸ்  தலைமையிலான அரசு அவசர கோலத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வண்ணியருக்கு மட்டும் வழங்கியதை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். ஒட்டுமொத்த மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய பிரதிநிதிகளில் ஒருவராக இந்த தீர்ப்பை முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்த தவறை அடுத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசும் ஏற்றுக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்றம் ஒரு வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பது சாமானிய மக்களுக்கு மிகவும் நம்பிக்கை ஊட்டி இருக்கிறது.  எனவே இதன் மூலமாக இந்த ஆண்டு பல கல்லூரிகளில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுகளை மீண்டும் அரசு பரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல தீர்ப்பை  வழங்க வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

மேலும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடைசி நேரத்தில் அவசரமாக நிறைவேற்றிய அந்த சட்டத்தை எதிர்த்து  ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு தொடர்ச்சியாக சட்டரீதியாகவும் போராட்டம் செய்தோம். இந்த வழக்கிலே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டாலும் கூட இந்த தீர்ப்பானது புலிப்படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பால முரளி என்பவர் ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட சமுதாய 68% சீர்மரபினர் பட்டியல் இன  மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்தமாக 10.5% ஒரு சாராருக்கு மட்டும் வழங்கிய போது உண்மையான தேச மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் வழங்கியது அனைத்து மக்களுக்கும் பெரிய அளவிலே கல்வி ரீதியாக அரசு வேலைவாய்ப்புகளில் எல்லாவற்றிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த ஆண்டு கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை. அதனால்  அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு சாமானிய மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை  மேலும் வலுவூட்டி இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |