Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிதாக 30 இடங்களில்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

30 இடங்களில் புதிதாக கல்குவாரிகள் அமைக்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

கட்டுமான பணிக்கான ஜல்லி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 30 இடங்களில் குவாரிகளை திறக்க தனியாருக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்டுமான பணிக்கு கான்கிரீட் கலவை தயாரிப்பது சாலைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கு கருங்கல் ஜல்லிகள் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 3,500 குவாரிகள் அனுமதிக்கப்பட்டன. இதில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான குவாரிகளில் அளவுக்கதிகமாக கருங்கற்கள் எடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

இதன் காரணமாக அந்த குவாரிகளை  அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிக்கான ஜல்லிகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கற்களை மூலப்பொருளாக பயன்படுத்தும் எம்சாண்ட் தயாரிப்பாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இதை கருத்தில் வைத்து புதிதாக கல் குவாரிகளை அனுமதிக்க  அரசு தயாராகி வருகிறது. இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரி கூறிய போது, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி ,திருவண்ணாமலை, மதுரை, கோவை, வேலூர், திருவள்ளூர், தேனி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள 30 இடங்களில் புதிய குவாரிகள் அமைக்கப்பட உள்ளது.

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணை ஒப்புதல் பெறுவதற்காக இறுதி கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குவாரிகள் செயல்பட நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் செயல்படத் தொடங்கினால் ஜல்லிகட்டு விலை உயர்வு  கட்டுக்குள் வரும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |