Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…. அமைச்சர் குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்து வருவதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ரேஷன் உணவு பொருட்களை கடத்துவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

150 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும். 2 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதன் காரணமாக அரசு நிதி சேமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |