Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை?…. சற்றுமுன் அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.

தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவி பரவி வருவதால் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்றும், மக்கள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக மக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |