Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு விரைவில்…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி, நிதிநிலை அறிக்கை, 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 75% மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல் விரைவில் மகளிர் உரிமைத் தொகையான மாதம் ரூ.1,000-ம் வழங்கப்போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாக தெரியும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |