Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்காக…. அரசின் அதிரடி திட்டம்….!!!!

பெண் குழந்தைகளை காப்போம்: பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பாலின பாகுபாடு அடிப்படையில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுப்பது,அவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவுபடுத்த மத்திய அரசு 30 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறது.

இந்த திட்டம் முதலில் அரியலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம்,பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கடந்த 2018ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு நிதி வழங்கி வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 30 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |