Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பென்ஷன்தாரர்களுக்கு…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை எளிமையான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக ஜீவன் பிரமான் இணையத்தளத்தில் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூத்த ஓய்வூதியர்களுக்கு இன்னும் அதிக வசதிகளை அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தவாறே சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆயுள் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு மே 26-ஆம் தேதி வெளியிட்டது. அதில், ஆயுர் சான்றிதழ், வேலையின்மை சான்றிதழ் மற்றும் திருமணம் தொடர்பான சான்றிதழ் போன்றவற்றை ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுள் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு மாதமும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு ஜூன் 30-ஆம் தேதிக்குள் இவற்றை சமர்ப்பிக்க விட்டால் சம்பந்தப்பட்ட பென்ஷனர் ஜூலை மாதத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஏறிச்சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஜூலையில் சமர்ப்பிக்க விட்டால் பென்சன் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பென்சனர்கள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கலாம். அப்படி சமர்ப்பிக்காத அவர்கள் அக்டோபர் மாதத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |