நேற்று மட்டும் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் தவிர்த்து 32 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,734 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.96 % குணமடைந்துள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,808 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 65,872 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,41,529 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு, 32 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்ட மாவட்டங்கள்:
சென்னை – 20
கோயமுத்தூர் – 10
செங்கல்பட்டு – 8
திருநெல்வேலி – 7
திருவள்ளூர் – 6
தேனி – 5
சிவகங்கை – 5
திருப்பத்தூர் – 4
மதுரை – 4
காஞ்சிபுரம் – 4
திண்டுக்கல் – 4
விருதுநகர் – 4
ராணிப்பேட்டை – 3
சேலம் – 3
கடலூர் – 3
விழுப்புரம் – 3
தஞ்சாவூர் – 3
ஈரோடு – 2
கள்ளக்குறிச்சி – 2
நாமக்கல் – 2
திருவண்ணாமலை – 2
தூத்துக்குடி – 2
திருச்சி – 2
வேலூர் -2
ராமநாதபுரம் – 1
தென்காசி – 1
திருப்பூர் – 1
அரியலூர் – 1
தர்மபுரி – 1
கன்னியாகுமரி – 1
கரூர் – 1
கிருஷ்ணகிரி – 1