தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொதுமுடக்க்கம் அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய இருக்கும் சூழலில் தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்டலங்களாக பிரித்து குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்பு இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தெரிகிறது. நேற்று வரை போக்குவரத்து ஆகஸ்ட் முழுவதும் ரத்து செய்யபடும் என்றும், ஒரு மாதத்திற்கு இயக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன இருந்தாலும் இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு இது குறித்த முழுமையான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.