தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படம், திருக்குறள் அந்த திருக்குறளுக்கான விளக்க உரையையும் பயணிகள் பார்வையில் தென்படும் வகையில் இடம் பெற வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அரசு பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும் என்றும் திருக்குறளும் அதன் விளக்க உரையும் பேருந்துகளை மீண்டும் அலங்கரிக்கும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.