Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி. அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

Categories

Tech |