தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று முதல் முழு அளவில் பேருந்து சேவை தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பயணிகள் முக கவசம் போட்டுள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.