தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் பேருந்துகளில்பயணம் செய்பவரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் அரசு சார்பிலும், ஆம்னி பேருந்துகளும், இயங்குகிறது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அதனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் பற்றி இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் படி அக்டோபர் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பேருந்துகளுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய வரி செலுத்தாத ஆம்னி பேருந்து சிறை பிடிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் மீது புகார்களை தெரிவிக்க 18004256151 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.