Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் விரைவில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கக்கூடிய நேரங்களில் போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். எனவே மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியபோது, பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்படும். மேலும் போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |