Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.  வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கும், 16ஆம் தேதி வாரநாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |