தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை வர இருப்பதால் இன்று முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 16 -ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்று பதிவு செய்து இருக்கக்கூடிய பயணிகளின் கட்டணம் 2 நாட்களில் திருப்பித் தரப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 16ம் தேதிக்கு பதில் வேறொரு நாட்களில் பயணிக்க பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.