Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருவதால் விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |