Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்… மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தத் திட்டத்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயம் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோகளில் செல்வது குறைந்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் நிலவிய கொரோனா தொற்றின் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அதனால் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை அதன்பின் பேருந்துகள் இயக்கப்பட்டபோது கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக பயண கட்டணங்களை அதிகரித்து இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக பேருந்துகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட்டு தற்போது தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் 10 முதல் 22 சதவிகித முறை குறைக்கப்பட்டுள்ளது. இனி கோவை ரூபாய் 1,815 முதல் ரூபாய் 3,025 வரை சென்னை மதுரை ரூபாய் 1776 முதல் ரூபாய் 2688 வரை, சென்னை- நெல்லை ரூபாய் 2063 முதல் 3473 வரை வசூலிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பில் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |