Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் தீபாவளி பண்டிகை போன்றே பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சுமார் 17,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகளில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரின் உத்தரவின் பெயரில், இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேலும் மக்களின் சிரமம் கருதி, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |