Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்.

மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.

Categories

Tech |