Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் மிகக் குறைந்த அகவிலைப்படி பெற்று வந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் முயற்சியின் படி அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை சுமார் 72 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது.

அதனை வழங்க கோரி பலமுறை போக்குவரத்து துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தது. அதாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கப்படும். இந்த இரண்டு செயல்பாடுகளும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.

இதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய தனி குழு அமைக்கப்படும். போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போக்குவரத்து துறை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |