விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் தமிழகம் முழுவதிலும் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக டெல்லியில் விவசாயிகள் இன்று தொடர்ந்து 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் தமிழகம் முழுவதிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால் சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.