Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்!!…. போலீசார் பலத்த பாதுகாப்பு….. டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள்  கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவையில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பரபரப்பையும், பதற்றத்தையும் குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது.

அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும்  பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், கடைவீதிகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |