தமிழகம் முழுவதும் கொடூரமான கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதன்படி சமீபத்தில் திண்டுக்கல்லில் பட்டப்பகலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். இதனால் ரவுடிகளை அழிக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்த ரவுடிகளிடம் இருந்து அரிவாள்கள் கத்திகள் 3 துப்பாக்கிகள் உள்பட 250 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவது ரவுடிகளை கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 70 ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடமிருந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற 20 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள பிரபல ரவுடிகளான காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சி.டி. மணி போன்ற ரவுடிகளை கைது செய்யப்பட்டு சிறையில் சிறையில் உள்ளனர் என்றும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.