Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி – சூப்பரான அறிவிப்பு …!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மாணவர்களின் கனவு தேசமாகவும், கனவு கோட்டையாகவும் பொறியியல் கல்லூரிகளும், அதன் பாடப்பிரிவுகளும் விளங்குகின்றன. ஆனால் சமீப காலமாகவே  பொறியியல் கல்லூரி மீதான தாக்கம் மாணவர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி கொண்டிருக்கும் இந்த வேளையில் இதுபோன்ற மனநிலை எதிரொலிதுக்கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில்தான் மாணவர்கள் வேலை இல்லாத் திண்டாட்டம் உள்ள இந்த சூழலில், போட்டியை சமாளித்து வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் தரமான பொறியியல் கல்லூரியை தேர்வு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் சமீபத்தில் தமிழகம் முழுவதும் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என செய்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என  ஏதுமில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது தரமானது தரமற்ற என இணைப்புக் கல்லூரிகளை பாகுபாடு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்

Categories

Tech |