Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி அறிவிப்பு… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த நிலையில், கொரோனா காரணமாக 59 ஆக உயர்த்தியது. தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும் தீரன் சின்னமலை படைத்தளபதி வீரன் பொல்லானுக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வீரன் பொல்லானுக்கு மணி மண்டபம் அமைக்கப் படவுள்ளது.

Categories

Tech |